/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_402.jpg)
திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (87) உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார்.
திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சொந்தஊரான மதுரை விரகனூர் பகுதியில் அவரது தாயார் சரோஜினி வசித்து வந்தார். இவருக்கு வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவினால்மதுரை அப்போலோ மருத்துவமனையில் நேற்று வரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு காலமானார்.
இந்த நிலையில், பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வடிவேலுவின்தாயார் இறப்பிற்கு இரங்கல்தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் செய்தியைத்தெரிவித்துள்ளார். இதையடுத்து, திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிவடிவேலுவின் தாயார் மறைவிற்கு தற்போதுநேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி,வடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)