தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், நேற்று (18.06.2021) 9 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தது. எனவே தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது. இதில் பேருந்து சேவைக்கு அனுமதி, ஜவுளிக்கடை திறப்பு உள்ளிட்ட தளர்வுகளைப் பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.