நாமக்கல் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே ஓட்டலில் ராமபுதூரை சேர்ந்த திருமங்கை (33) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர். நாமக்கல் அருகே மோகனூரில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கணவர் ரமேசிடம் கூறிவிட்டு திருமங்கை தனது சித்தி மற்றும் அவரது மகளுடன் சென்றுள்ளார். அதன் பின்னர் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் திருமங்கை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியம் மாலமேடு கவுண்டப்ப கவுண்டன் புதூர் கிராமம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையோரம் புதரில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து துப்பட்டாவால் நெரிக்கப்பட்டு இருந்தது. கைகள் பின் பக்கம் கட்டப்பட்டிருந்தது. இடது கையில் காயமும் காணப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டது. இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதில் திருமங்கை, தனபால் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். பின்பு வயது காரணமாகக் கூறி, ரமேஷ் என்பவரை திருமங்கை திருமணம் செய்துள்ளார். பின்பு முன்னாள் காதலன் தனபாலை விசாரித்த போது, இருவரும் காதலித்த பொழுதே முறையற்ற உறவை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், வயதை காரணம் காட்டி தனபாலை திருமணம் செய்து கொள்ள மறுத்து ரமேஷ்ஷை ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கின்றார்.
ஆனால் தனபால் உடனான உறவை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளார். இதுபோலவே சம்பவ தினத்தன்றும் கோவிலுக்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு தனபாலுடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது திருமங்கையின் கையில் ஆடம்ஸ் என்று பச்சை குத்தி இருந்ததை பார்த்த தனபால் அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தன்னுடைய கணவரின் மற்றொரு பெயர் என்று திருமங்கை கூறி இருக்கின்றார். இதனை தனபால் நம்பாமல் திருமங்கையிடம் சண்டை போட்டுள்ளார். பின்பு ரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி திருமங்கையை கொலை செய்ததாக கள்ளக்காதலன் தனபால் ஒப்புக் கொண்டு இருக்கின்றார். அதன் பின்னர் ஊருக்கு செல்வதாக தன்னுடைய நண்பரின் காரை வாங்கி மூலனூர் பகுதியில் இருக்கும் சாலையில் பிணத்தை வீசி விட்டு தப்பி ஓடி விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் கொலை செய்யப்பட்ட திருமங்கை உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடலை வாங்கி செல்ல யாரும் வராததால் அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.