
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடைய 14 வயது மகள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் தட்டச்சுப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் லாரி டிரைவரான மகாலிங்கம் என்பவர், கடந்த 5ஆம் தேதி தட்டச்சுப் பள்ளிக்குச் சென்ற சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆண்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருப்பூரில் சிறுமியுடன் தங்கியிருந்த மகாலிங்கத்தைக் கைது செய்தனர். மேலும், சிறுமியை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த மகாலிங்கத்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.