Skip to main content

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

கத

 

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கியது.

 

5வது நாளான நேற்று (20.09.2021) கிராம ஊராட்சி வார்டு பதவிகளுக்கு 24,027 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 6,864 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதைப்போல, ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கு 2,298 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளுக்கு 202 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 5 நாட்களுக்கும் சேர்த்து 54,045 பேர் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி தேதி என்பதால் வேட்பமனுத்தாக்கல் சூடு பிடித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்