Skip to main content

வெற்றி அறிவிப்பில் தில்லுமுல்லு...வேதனையில் தீக்குளிக்க முயற்சித்த வேட்பாளர்...!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

வாக்கு எண்ணிக்கையானது, சில வேட்பாளர்களை நொந்து நூலாக்கி விடுகிறது. அப்படி ஒரு வேட்பாளராக இருக்கிறார் ராமமூர்த்தி. வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் குளறுபடி இருப்பதாக தீக்குளிக்க முயற்சித்தார்.  சாலை மறியலிலும் கூட ஈடுபட்டு போராடி வருகிறார். 

 

local body election result problem

 



விருதுநகர் – கூரைக்குண்டு ஊராட்சியின் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் சரவணன். அவரோடு, சரவணன் என்பவரும், பெண் வேட்பாளர் ஒருவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நடந்தபொது, ராமமூர்த்தியும் சரவணனும் தலா 183 வாக்குகள் வீதம் பெற்றனர். இருவரிடமும் அதிகாரிகள், 'இரண்டு நாட்கள் கழித்து விருதுநகர் ஊராட்சி அலுவலகத்துக்கு வாருங்கள். குலுக்கல் முறையில் வேட்பாளரை தேர்வு செய்வோம்' எனச் சொல்லி அனுப்பினர்.

என்ன நடந்ததோ தெரியவில்லை. குலுக்கலே நடத்தாமல், சரவணனுக்கு வெற்றிச் சான்றிதழ் கொடுத்துவிட்டனர். அவரும் கூரைக்குண்டு ஊராட்சி ஆவணத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். ராமமூர்த்திக்கு இத்தகவல் சென்றதும் துடித்துப்போனார். அவர் தரப்பினர், 'குலுக்கலே நடத்தாமல் எப்படி ஒருதலைப்பட்சமாக வெற்றி என்று அறிவிக்கலாம்?' என்று கேள்வி கேட்டு முற்றுகையிட்டனர். அவர்களிடம், 'தேர்தல் அலுவலர் இன்று விடுமுறையில் இருக்கிறார். அதனால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரைப் பாருங்கள்' என்று அதிகாரிகள் தெரிவிக்க, ஆவேசமான ராமமூர்த்தி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

அதனைத் தடுத்த காவல்துறையினருக்கும், ராமமூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட, காவலர்கள் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு, வாக்கு எண்ணிக்கை குறித்த புகாரை ராமமூர்த்தி கொடுத்தார். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தனர். ஆனாலும், தனது புகாரைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில், ராமமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் சாலை மறியலிலில் ஈடுபட்டனர். 
 

சார்ந்த செய்திகள்