Published on 20/11/2023 | Edited on 20/11/2023

சமத்துவச் சமுதாயம் அமைய உழைப்போம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இன்று, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த அநீதிகளுக்கு எதிரான நெடும்பயணத்தின் முதலடி எடுத்து வைக்கப்பட்ட நாள். கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள். நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள். கொள்கைக் களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம். ஆனால் நமது இலக்கு மாற்றமில்லாதது. அதுதான் சமத்துவச் சமுதாயம். அதை நோக்கி உழைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.