![Lesson taught by 'Kaja' - Youths who have repaired 31 water bodies in a year and stored water!](http://image.nakkheeran.in/cdn/farfuture/6yDGqEzyb4ffs4jpOwhi-Fg3Ja8vYcp1cnz5zVnalrE/1609435650/sites/default/files/2020-12/tfyutr76575.jpg)
![Lesson taught by 'Kaja' - Youths who have repaired 31 water bodies in a year and stored water!](http://image.nakkheeran.in/cdn/farfuture/HqMIsY75o-vWvMCcqRjZfQ287FuXCCWrCDkcsTtAm8k/1609435650/sites/default/files/2020-12/6865865.jpg)
![Lesson taught by 'Kaja' - Youths who have repaired 31 water bodies in a year and stored water!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ohF7AWZHOnvO9RTqUbLI46eIoz4npgzk3h1EJWqaqgw/1609435650/sites/default/files/2020-12/rt865865.jpg)
![Lesson taught by 'Kaja' - Youths who have repaired 31 water bodies in a year and stored water!](http://image.nakkheeran.in/cdn/farfuture/zkCZkMrxZ2Aju3R0Qh0Ef4mOkJyvKlmnYvI0HsDQ260/1609435650/sites/default/files/2020-12/re745745.jpg)
![Lesson taught by 'Kaja' - Youths who have repaired 31 water bodies in a year and stored water!](http://image.nakkheeran.in/cdn/farfuture/z263pJ2W6UlIJ6IC2bFxFccHuZWovrb58wFYWq0665E/1609435650/sites/default/files/2020-12/rtu765.jpg)
'கஜா புயல்' டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டபோது விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துகிடந்த போது, இத்தனை வருட உழைப்பும் ஒரு சில மணி நேரத்தில் சாய்ந்துபோனதே என்று கண்கலங்கி நின்ற விவசாயிகள், இனி இப்படி மரங்களை வளர்க்க தண்ணீருக்கு எங்கே போவோம் எனக் கண்ணீர் விட்டனர்.
தண்ணீரைச் சேமிக்கும் ஏரி, குளம், குட்டைகளும் மராமத்து செய்யப்படவில்லை. நிலத்தடி நீரும் அதலபாதாளத்திற்குப் போய்விட்டது எனச் சோகத்தில் மூழ்கியிருந்த நேரத்தில், தென்னையால் படித்து வெளிநாடு, வெளியூர்களில் சம்பாதித்துவந்த இளைஞர்கள் இணைந்து 'கஃபா' என்ற அமைப்பைத் தொடங்கி, நீர்நிலைகளை மராமத்துச் செய்யத் தொடங்கினார்கள். 2019 -ல் தொடங்கிய சீரமைப்புப் பணிக்கு நற்பலன் கிடைத்ததால், அடுத்தடுத்து அந்தப் பணியைச் செய்துவருகிறார்கள். 2020 ஆண்டில் மட்டும் 31 நீர்நிலைகளைச் சீரமைத்துத் தண்ணீரைத் தேக்கிச் சாதித்திருக்கிறார்கள், கைஃபா இளைஞர்கள். இதுகுறித்து, கைஃபா இளைஞர்கள் கூறும்போது,
சென்ற (2019) ஆண்டு, நாங்கள் 25 இடங்களில் நீர்நிலைகள் மற்றும் வரத்து வாரிகள் சீரமைக்கும் வேலைகளைச் செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த 2020 ஆண்டும் அந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்தோம். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் அனைத்தையும் முடக்கினாலும், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக இடங்களில் சீரமைக்கும் வேலைகளைச் செய்து முடித்தோம்.
அந்த இடங்கள் பின் வருமாறு:
1. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கல்யாணஓடை வரகன் ஏரி - வரத்து வாய்க்கால்.
2. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், முன்னாவல் கோட்டை முடவன் ஏரி வரத்து வாரி.
3. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் வண்ணான் குளம்.
4. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், பேராவூரணி வடபாதி வாய்க்கால்.
5. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கள்ளப் பெரம்பூர், செங்கழு நீர் ஏரி. (குடிமராமத்துப் பணிகள்)
6. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், பிரதாபராமபுரம் பழைய சந்திர நதி வாய்க்கால்.
![cnc](http://image.nakkheeran.in/cdn/farfuture/PL81U2OEyWi4fIc51p2Q-EYuanv6bRyAM1xzG7KYrSQ/1603347336/sites/default/files/inline-images/01%20%281%29_0.png)
7. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவாவிடுதி தெற்கு வடக்கு வடிகால் வாய்க்கால்.
8. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆதி திராவிடர் குளம், வரத்து வாரி.
9. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், சொர்ணக்காடு கொப்பி முனி வாய்க்கால்.
10. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்படினம் சாலை குளம்.
11. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், லக்ஷ்மி நரசிம்மபுரம் வெட்டுக் குளம்.
12. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் பூவற்றக்குடி செல்ல ஊரணி.
13. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி, பெரிய குலத்திற்குச் செல்லும் வரத்து வாரிகள் (2)
14. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு ராஜாளி ஏரி ( குடி மராமத்து)
15.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், களத்தூர் காடுவா ஏரியின் வரத்து வாரி.
16. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், புதுப்பட்டினம் வாய்க்கால்.
17. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், தென்னங்குடி பெரிய குலத்திற்கு செல்லும் வரத்து வாய்க்கால்கள் (3)
18. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தமங்கலம் வரத்து வாரிகள்
19. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பை பரம்பாடி குளம் வரத்து வாரிகள் (3)
20. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பட்டிப்புஞ்சை வெட்டு குளம்.
21. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், மரக்காவலசை கழுமங்குடா மையத்தான் குளம்.
22. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், துறையூர் பிள்ளையார் குளம்.
23. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், பின்னவாசல் பிக்சுண்டு குளம்.
24. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர் பெரிய ஏரி.
25. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், மருங்கப்பள்ளம் காட்டுக் குளம்.
26. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், மருங்கப்பாள்ளம் கைலான் குளம்.
27. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தாமிரங்கோட்டை கொழுங்கசெரி.
28. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மனோரா பிள்ளையார் குளம்.
29.தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், சொர்ணக்காடு ஆதி திராவிடர் குளம்.
30. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி வண்ணான் குட்டை.
31. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மனோரா கடலுக்கு அருகே சதுப்பு நிலக்காடுகள் உருவாக்க கரைகள் அமைக்கப்பட்டது.
காவேரி டெல்டாவில் 4 மாவட்டங்கள், 8 வட்டங்கள், மொத்தம் 31 நீர்நிலைகள் எனச் சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக இடங்களில் வேலைகள் நடந்தது. காவிரி நீர் மற்றும் பருவ மழையினால் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிறைந்து காட்சி அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இதையல்லாமல் பல இடங்களில் மரக் கன்றுகள், பனை விதைகள், குறுங்காடுகள், மழை நீர் சேகரிப்புத் திட்டங்கள் எனப் பல செயல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
![nkn](http://image.nakkheeran.in/cdn/farfuture/IREOOio04q3syMvxUom14kZq7OFJEKJ7DhIvdNb06TY/1603964439/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01_32.gif)
இந்தத் தருணத்தில் எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்த அனைத்து ஊர் மக்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், இந்த முயற்சியினை மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கும், பொருளாதார உதவிசெய்த முகம் தெரிந்த, தெரியாத அனைத்து நல்லுங்களுக்கும், மில்ஆப் தொண்டு நிறுவனத்திற்கும், எங்கள் வேலைகளின் செலவைக் குறைக்க பெரும் உதவியாய் வாகன உதவிசெய்த மில்மிஸ்ட் ஃபுட் ப்ரொடெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், பி.டபிள்யூ.டி அதிகாரிகளுக்கும், எங்களது செயல்களைப் பல இடங்களுக்குக் கொண்டு சென்ற ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைதள நண்பர்களுக்கும், ஜெ.சி.பி, ஹிட்டாச், ட்ராக்ட்ர் போன்ற வாகன ஓட்டுநர்களுக்கும், கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல 2021 ம் ஆண்டும் இதை விட பல மடங்கு ஆக்கத்துடன், மேலும் பல இடங்களில் நீர்நிலைகளை மீட்டு, சீரமைத்து, தண்ணீரை நிரப்புவோம். அதேபோல, அடுத்த 5 ஆண்டிற்குள், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் மீட்கப்படும், தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் அவலம் முடியும், தண்ணீர்ப் பஞ்சம் காணாமல் போகும், முப்போகமும் விவசாயம் நடக்கும்! என்றனர்.