Skip to main content

சிறுத்தை அச்சுறுத்தல்; கார் ஷெட்டுக்குள் தவித்த 5 பேர் மீட்பு 

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Leopard threat; Rescue of 5 people trapped inside the car shed

திருப்பத்தூரில் தனியார் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுத்தை புகுந்த கார் ஷெட்டுக்குள் இருந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளியில் இன்று மாலை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சிறுத்தை கார் ஷெட் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. வனப்பகுதிகளே சுற்றிலும் இல்லாத நகர் பகுதியில் சிறுத்தை எவ்வாறு வந்தது என்பது பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி. இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை புகுந்த அந்த கார் ஷெட்டில் இரண்டு கார்களில் மொத்தமாக ஐந்து பேர் சிக்கி இருந்தனர். சிறுத்தை அச்சுறுத்தலால் 5 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளேயே இருந்த அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பலமணிநேர போராட்டத்திற்குப் பின் வனத்துறை உதவியுடன் தற்போது ஐந்து பேரும் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அங்கு அதிகப்படியான வனத்துறை அதிகாரிகள் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்