
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இரண்டு விவசாயிகளை சிறுத்தை தாக்கி சம்பவம் குறித்து துறையூர் வனத்துறை பொதுத்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவலர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாங்கியம் காட்டுப்பகுதியில் உள்ள குகை அருகே நின்று ஹரிபாஸ்கரன் என்ற விவசாயி தன்னுடைய செல்ஃபோனில் செல்ஃபி எடுத்த போது மறைந்திருந்த சிறுத்தை அவரை தாக்கியுள்ளது. மேலும் அவரை காப்பாற்ற முயன்ற துரைசாமியையும் சிறுத்தை தாக்கியுள்ளது. வனப்பகுதியில் படுகாயமடைந்தஹரிபாஸ்கரனை துரைசாமி உள்ளிட்ட சிலர் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரண்டு விவசாயிகளை சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் துறையூர் வனத்துறையினர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த ஒன்றிய ஆணையர்கள் மற்றும் காவல் துறையினர் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)