வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 43.89 கோடி நிதியில் குடியாத்தம் கௌண்டன்ய ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் தாழையாத்த முதல் சேம்பள்ளி சாலை வரையிலான கௌண்டன்ய மகா நதியின் வலது கரையோரம் புதியதாக அமைக்கப்பட்ட சாலையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், நான் அன்றைய காலகட்டத்தில், 12 கிலோ மீட்டர் சைக்கிள்ல வந்து கௌண்டன்ய ஆற்றின் மணலில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தையும் கேட்டு அரசியல் தெரிந்து கொண்டேன். குடியாத்தத்தில் இல்லாத கட்சியே உலகத்தில் கிடையாது. ஒரு பாட சாலையாகவே எனக்கு குடியாத்தம் இருந்தது. இங்கு தான் அரசியல் விழிப்புணர்வு பெற்றவன் நான். எனக்கே ஒரு காலத்தில் குடியாத்தத்தில் எம்.எல்.ஏவுக்கு நிற்கனும் என ஆசை இருந்தது. ஆனால் கடைசிவரை முடியவில்லை.
அப்போதே 100 கோடியில் கட்டப்பட்டது மோர்தானா அணை. மோர்தானாவை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்கள். இன்னும் 10, 20 நாட்களில் சுற்றுலாத் துறை அமைச்சரை அழைத்து வந்து சிறிய சுற்றுலா சுற்றுலா தளமாக்கப்படும். கலைஞர் தலைவரே, முதல்வர் ஆன கொஞ்ச நாளைக்கு பிறகு தான் தேசிய அரசியலில் கவனம் பெற்றார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே இந்தியா முழுவதும் தேசிய அரசியலில் தலையிட்டு முக்கியத்துவம் பெற்றார். வேகமாக ஆராய மாட்டார். எல்லாத்தையும் கேட்டு பிறகு நேரம் எடுத்து நிதானமாகச் சரியாகச் செய்து கொடுக்கும் ஆற்றல் படைத்தவர். "அண்ணா, பேராசிரியருக்கு பிறகு இந்த பதவியில் நான் இருக்க காரணம் கட்சியில் ஆடாமல், அசையால் இருந்ததால் தான். கெங்கையம்மன் தரைப்பாலம் இனி "தளபதி மு.க.ஸ்டாலின் பாலம்" எனப் பெயர் வைக்கிறேன்’ என்றார்.