தென்காசி மாவட்டத்தின் மாவட்டப் பஞ்சாயத்து தலைவியான தமிழ் செல்வி தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒரு கோடி 75 லட்சம் நிதி வந்ததை மன்ற உறுப்பினர்களிடம் விவாதிக்காமல் தன்னிச்சையாக அந்த நிதியினை நான்கு வார்டுகளின் கிணறுகளுக்காக ஒதுக்கியிருக்கிறார். மன்றத்தில் விவாதிக்காமல் தன்னிச்சயைாக அதனை தீர்மானத்தில் சேர்த்து பணிகளைத் துவக்கிவிட்டார் தலைவி. அந்தத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தென்காசி மாவட்டக் கலெக்டரான கோபாலசுந்தர்ராஜிடம், மாவட்ட பஞ்சாயத்தின் ஆறு தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ந்து மனுக் கொடுத்துள்ளனர்.
மனுவைக் கொடுத்து விட்டு வந்த உறுப்பினர்கள் பேசும் போது, ‘மாவட்டப் பஞ்சாயத்து தலைவியின் செயல்பாடு குறித்து முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம். மேலும் தீர்மானத்தை ரத்து செய்யாவிட்டால் அடுத்து கூட்டத்தைப் புறக்கணிப்போம்’ என்றார்கள். மாவட்ட பஞ்சாயத்தின் தலைவியின் மீதான புகார், மாவட்டத்தின் ஊராட்சிகளின் அளவில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.