Lawyer Balu expelled from PMK - Ramadoss takes action

பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும்இடையேஏற்பட்ட அதிகார மோதலுக்கு பின் கடந்த 05/06/2025 அன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டனர்.

அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவை இணைக்க குருமூர்த்தி மூலம் பேசப்பட்டதாக யூகங்கள் கிளம்பின. அதேநேரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி ராமதாஸும், அன்புமணியும் இணைந்து விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமகவில் முக்கிய முகமாக அறியப்பட்ட ஒருவரான வழக்கறிஞர் பாலுவை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். பாமகவில் சமூக நீதிப் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து பாலுவை நீக்கியுள்ள ராமதாஸ், பாலுவிற்கு பதிலாக வி.எஸ்.கோபு என்ற வழக்கறிஞரை சமூகநீதிப் பேரவையின் புதிய தலைவராக நியமித்துஅறிவித்துள்ளார். ஏற்கனவே அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வரும் நிலையில் இந்த தகவலும் பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment