Skip to main content

மாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

 

உ.பி. சட்டக்கல்லூரி மாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான முன்னாள் மத்திய அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

c


 
முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவுக்கு எதிராக உ.பி. சட்டக்கல்லூரி மாணவி,   பாலியல் குற்றச்சாட்டை கூறி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்பத்தியது.   இதையடுத்து அந்த மாணவியிடம் சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு 11 மணி நேரம் விசாரணை நடத்தியது.  சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் இக்குழுவினர் விசாரணை நடத்தினர்.   மேலும், சின்மயானந்தா கல்லூரிகளின் முதல்வர்களிடமும் விசாரணை நடத்தினர்.

 

u

 

மேலும் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சின்மயானந்தாவின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல். 

சார்ந்த செய்திகள்