Skip to main content

தாமதமான சிக்கன் ரைஸ்; ஹோட்டல் சூறையாடல்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

Late Chicken Rice; Hotel robbery

 

சிக்கன் ரைஸ் தாமதமாகக் கொடுத்ததற்காக இருவர் கடையைச் சூறையாடிய சம்பவம் தஞ்சையில் நிகழ்ந்துள்ளது.

 

தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியில் தீன் சிக்கன் சென்டர் என்ற அசைவ துரித உணவகம் ஒன்றில் நேற்று இரவு ஒருவர் உணவருந்த வந்தார்.  அப்பொழுது சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில் கொஞ்ச நேரம் காத்திருக்கும்படி கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சிறிது நேர காத்திருப்புக்குப் பின்னும் சிக்கன் ரைஸ் தராததால் ஆத்திரமடைந்த அவர் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்றுவிட்டார். பின்னர் நண்பர்களை அழைத்து வந்த அந்த நபர் ஹோட்டலை சூறையாடினார். கடையிலிருந்த அடுப்பு, எண்ணெய் மற்றும் சமைக்கப்பட்ட உணவு பொருட்களை கீழே தள்ளிவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. 

 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிசி காட்சிகளை ஆய்வு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மயிலாடுதுறை டூ அரியலூர்? சிறுத்தை நடமாட்டத்தால் குழப்பத்தில் வனத்துறை!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Leopard movement near Ariyalur; Forest department in confusion

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இத்தகைய சூழலில் சிறுத்தை இடம்பெயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதாவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் இடம் பெயர்ந்த சிறுத்தை குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சுற்றித் திரிவதாகத் தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை அடுத்து  வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டனர். அந்தப் பகுதியில் சுமார் 15 இடங்களில்  தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூண்டுகளும் அமைக்கப்பட்டது. அதோடு கடந்தாண்டு நீலகிரி அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி புலியான டி23 புலியைப் பிடிப்பதில் மிகுந்த நேர்த்தியாகச் செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தனர். இவர்கள் வனத்துறையுடன் சேர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இத்தகைய சூழலில் மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் சிறுத்தையைப் பார்த்ததாகத் தொழிலாளி ஒருவர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தெர்மல் ட்ரோன் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாகச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

Leopard movement near Ariyalur; Forest department in confusion

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள மருத்துவமனையில் உள்ள வேலியின் சுவரில் சிறுத்தை ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் சிறுத்தையைப் பார்த்ததாக கூறியுள்ளனர். அதே சமயம் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இது குறித்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவிக்கையில், “சிறுத்தை பிடிபட்ட பின்னரே அதன் உடல் அமைப்பை வைத்தே மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என உறுதிப்ப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார். அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.