Skip to main content

‘ஏலேலோ ஐலசா... ஏரி மீன் ஐலசா...’ - மறுகால் ஓடும் காஞ்சி, செங்கை மாவட்ட ஏரிகள்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

 

'நிவர்' புயல் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி, மறுகால் ஓடுகிறது. இதனால், கிராம மக்கள் ஏரியில் மீன்பிடித்து அங்கேயே விற்பனை செய்கின்றனர்.

 

‘ஏலேலோ ஐலசா.. ஏரி மீன் ஐலசா.. ஏ கட்லா வருது ஐலசா...’ என ராகத்தோடு பாட்டுப்பாடி மீன் பிடிக்கும் அவர்களது வலையில், விலாங்கு, கடல், ரோகு, வாவல், பாறை என வகை வகையான மீன்கள் சிக்குகின்றன.

 

இதுஒருபுறம் இருக்க, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் செல்லும் பாலாற்றில் உள்ள வாலாஜாபாத்- அவலூர் சாலையின் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கி, இருபுறமும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.

 

இதனால், போக்குவரத்தை தடை செய்து பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவலூர், காமராஜபுரம், இளையனார் வேலூர், தம்மனூர், அங்கம்பாக்கம், கன்னடியன் குடிசை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 20 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.