Published on 13/02/2020 | Edited on 13/02/2020
திருப்பூர் மாவட்டம், குண்ட்டம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக கோவை மத்திய சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நெஞ்சு வலி என்று கூறியவரை மத்திய சிறை காவலர்கள் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் காவலர்களிடமிருந்து தப்பியோடி விட்டார் சுப்பிரமணியம்.

உடனே, சிறை காவலர்கள் பந்தையசாலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். தப்பித்து ஓடிய சுப்பிரமணியத்தை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.