/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/child kovai1.jpg)
கோவை மாவட்டம் பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச்சேர்ந்த 35 வயதானவர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆயா வேலை பார்த்து வருகிறார். இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்களது மகள், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு , மனைவி வேலைக்கு சென்று விட , மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவரை அவரது தந்தை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இது தொடர்கதையாகியுள்ளது. இந்த விவகாரம் அவரது மனைவிக்கு தெரியாது . சிகிச்சைக்காக தனது மகளை, அரசு மருத்துவமனை அழைத்து வந்துள்ளனர். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக அறிந்த தாய், மகளிடம் கேட்டதில், தந்தை தான் இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் , பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்துள்ளனர். ஏற்கனவே செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தந்தை மற்றும் அவரது சகோதரர் இணைந்து சிறுமியை கற்பழித்த சம்பவத்தில் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது, வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)