அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் உள்ள பழுதுகளை நீக்கி விபத்துக்களை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலத்தின் இணைப்புகளில் உள்ள இரும்புக் கம்பிகளை தரமானதாக அமைத்துத்தர வேண்டும் எனவும், கொள்ளிடம் பாலத்தில் இருபுறமும் நடைமேடை அருகில் மண் மேடுகளை அகற்றி விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் திருமானூரில் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், தே.மு.தி.க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தினர், நாம் தமிழர், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.