சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள திரு.வி.க.நகர்ப் பகுதியில் வசிக்கும் திமுக கிழக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வி. அருண் ராஜன் என்பவருக்கும், பி. மோனிஷா (எ) வித்யா என்கிற மணப்பெண்ணுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மணமக்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தின் போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா. ரங்கநாதன், பகுதி செயலாளர் முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.