நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையானது நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை டி.ஜி.பி. முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. உத்தரவிட்டுள்ளார்.