Skip to main content

கொடநாடு வழக்கு; கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி விசாரணை

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Kodanadu case CBCID probes Kanagaraj's brother Dhanapal

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கூலிப்படையைச் சேர்ந்த 10 பேரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சில ஆவணங்களை கனகராஜின் சகோதரர் தனபால் அழித்ததாகக் காவல்துறையினருக்குத் தெரியவந்தது.

 

இது சம்பந்தமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனபாலை ஜாமீனில் விடுவித்தனர். வெளியே வந்த தனபால், கடந்த மாதம் நில மோசடி வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே தனபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது செய்தியாளர்கள் வெளியே கூடி நின்றனர். அப்போது அவர், “கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் தெரிவிக்க உள்ளேன்” என்றும் கூறியிருந்தார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தனபால் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “சிபிசிஐடி போலீசார் வேண்டும் என்றால் என்னை விசாரிக்கட்டும். நான் முழு ஒத்துழைப்பும் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று கூறி இருந்தார்.

 

இதையடுத்து கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கக் கோரி உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. தனபாலிடம் விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி ஏதும் தேவையில்லை. சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரித்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபால் இன்று காலை ஆஜரானார். இதையடுத்து இவரிடம் இன்று நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதன் மூலம் தனபாலிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓடும் ரயில் மீது மது பாட்டில்கள் வீச்சு; பயணிகள் அச்சம்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Throwing liquor bottles on a moving train; Passengers fear

ஓடும் ரயில்  மீது மது பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் சென்னையில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மறைமலைநகர் பகுதியில் ரயில் மீது மர்ம நபர்கள் மது பாட்டில் வீசியதாக பயணிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். எழும்பூரில் இருந்து புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மநபர்கள் குடிபோதையில் மதுபாட்டில்களை வீசியதாக கூறப்படுகிறது. இதுபோன்று  ரயில் மீது மது பாட்டில்கள் வீசப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பயணிகள் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யா; பாய்ந்தது குண்டர் சட்டம்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Rowdy Sirkazhi Satya who was shoot; The thug law was passed

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்றதோடு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த என்கவுன்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று பிரபல ரவுடி சாமி ரவி சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பிரபல ரவடியான சீர்காழி சத்யாவை போலீசார் சுட்டுப்பிடித்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சீர்காழி ரவுடி சத்யா மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் மாமல்லபுரம் அருகே போலீசாரின் என்கவுண்டர் முயற்சியில் சீர்காழி ரவுடி சத்யா சுட்டுப் பிடிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து கைது செய்யப்பட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்  சீர்காழி ரவுடி சத்யா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.