அக்டோபர் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 40 குறைக்கப்பட்டிருப்பதால், பின்னலாடைத் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் 2,000- க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் நூல் விலையில் ஏற்றம், இறக்கம் இருப்பதால், ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் இழப்பைச் சந்தித்து வருவதாக பின்னலாடை நிறுவனங்கள் கூறி வந்தன.
அதே நேரத்தில், நூல் விலையைக் குறைக்கக் கோரி, கடந்த சில மாதங்களாக போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டுள்ளன. அதன்படி, நூல் விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களில் நூல் விலை கிலோவிற்கு 110 ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதால், பின்னலாடைத் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.