
தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக இருந்த ஆனந்த பாட்டீல் ஐஏஎஸ் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தமிழக ஆளுநரின் செயலாளர் பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.