புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களை கேட்க அதிகாரம் உள்ளது. அவர் அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் 'புதுச்சேரி ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு மக்களால் தேர்ந்தெடுத்த மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும் என்றும் கருத்து தெரிவித்து கடந்த 30-ஆம் தேதி அதிரடி தீர்ப்பளித்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த தீர்ப்பை எதிர்த்து கிரண்பேடிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கினை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், நீதிமன்ற விடுமுறைக்கு பின்பு (ஜுலை) வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அதுவரை உயர்நீதிமன்ற தீர்ப்பு படிதான் செயல்பட வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளது.