Skip to main content

சேலத்தில் பட்டப்பகலில் 3 வயது குழந்தை கடத்தல்... சிலமணி நேரத்தில் மீட்பு

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

சேலத்தில் 3 வயது ஆண் குழந்தை காணாமல் போன நிலையில் நடுரோட்டில் விடப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர்.

The kidnapped 3 year old child in Salem ...

 

சேலம் சத்திரத்தை சேர்ந்தவர் பாலாஜி. அவருக்கு 3 வயதில் யோகேஸ்வரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இன்று காலை வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தை யோகேஷ் காணாமல் போனதை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தேடியும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

The kidnapped 3 year old child in Salem ...

 

 

The kidnapped 3 year old child in Salem ...

 

இந்தபுகாரின் அடிப்படையில் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சியை சோதித்தபோது ஸ்கூட்டியில் வந்த இரண்டு பெண்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை சேலத்தான்பட்டியில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றதால் அழுந்து கொண்டிருப்பதாக தகவல் வர போலீசார் சென்று விசாரித்ததில் அந்த குழந்தை காணாமல் போன சத்திரத்தை சேர்ந்த பாலாஜியின்  குழந்தை யோகேஷ் என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் யார் அந்த பெண்கள் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; காவல்துறை வெளியிட்ட புதிய சிசிடிவி காட்சி

Published on 14/07/2024 | Edited on 14/07/2024

 

Armstrong's case; New CCTV footage released by police


தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகளை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் 7 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நீதிமன்றம் 5 நாள் விசாரணைக்கு அனுமதி வழங்கியது, இதையடுத்து காவல்துறையினர் 11 பேரையும் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு சென்று விசாரித்த போது, வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பிரபல ரவுடி திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான திடுக்கிடும் தகவல்களையும்,  அதற்கான சதி திட்டம் தீட்டிய இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குறித்தும்  தெரிவித்துள்ளான்.

இதனால் அவன் குறிப்பிட்ட புழல் வெஜிடேரியன் நகருக்கு அவனை இன்று அதிகாலை அழைத்துச் சென்று தடயங்கள் ஏதேனும் உள்ளதா ? என்பது குறித்து கண்டறிவதற்காக காவல்துறையினர் சென்றபோது, அவர்களின் பிடியில் இருந்து ரவுடி திருவேங்கடம் தப்பிச் சென்று, அப்பகுதியில் உள்ள இரும்பு தகடு மேய பட்ட சிறு கூரையின் உள்ளே பதுங்கிக் கொண்டு அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்டுள்ளான். அப்போது சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தும் சரணடையாமல் வெளியே வர மறுத்து  தப்பி செல்ல திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி காவல்துறையினர் ரவுடி திருவேங்கடத்தை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் மார்பிலும், வயிற்றிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்த அவனை மீட்டு மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

nn

அங்கு உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து ரவுடி திருவேங்கடத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புழல் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு நீதிபதி ஒருவர் முன்பு உடற்கூறாய்வு நடைபெற உள்ளது.மேலும் என்கவுன்டர் நடைபெற்ற இடத்தில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரும் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்யும் புதிய காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியான சிசிடிவி காட்சியில் கொலையை நிகழ்த்திவிட்டு தப்பியோடும் காட்சிகள் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வெளியான புதிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'கோவையில் திருடர்கள்... விருதுநகரில் விஐபிக்கள்...' - பகீர் கிளப்பும் முகமூடி கொள்ளை கும்பல்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 'We are the owner... we are the thief...'- Club is also a masked bandit

கோவையில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் முகமூடி அணிந்து கொண்டு 4 நபர்கள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறை இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் தமிழகம் முழுவதும் ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்தது தெரிய வந்துள்ளது.

கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டுள்ள இந்த கும்பல் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை மாநகரில் மட்டும் 18 கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 68 மேற்பட்ட ஹவுஸ் பிரேக்கிங் (வீடு உடைப்பு)  மற்றும் ராபரியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொள்ளையை அரங்கேற்றிய இந்த கும்பல் விருதுநகரில் நான்கு கோடி ரூபாய்க்கு ஸ்பின்னிங் மில் வாங்கி  நடத்தி விஐபிக்களாக  சுற்றிவந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களாக நடைபெற்ற தீவிர தேர்தல் வேட்டைக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு கும்பல் பிடிக்கப்பட்டுள்ளது. மூர்த்திக்கு ராட் மேன் என்ற பெயரும் உள்ளதாம். கொள்ளையடிக்க வீட்டின் கதவுகளை உடைக்க ராட் பயன்படுத்தியதால் மூர்த்திக்கு ராட் மேன் என பெயர் வந்துள்ளது என மூர்த்தியை கைது செய்துள்ள ராஜபாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  மேலும் பலரைத்  தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.