கேரள மாநிலம் குமுளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் கவிஞரும் எழுத்தாளருமான அல்லி பாத்திமா, பொன்வனக்காடு பகுதியில் வாழும் மலைவாழ் மக்களோடு தங்கியிருந்து, அவர்களின் வாழ்க்கையை, அருகிலிருந்து கவனித்து, அதன் பின்னணியில் ’பாண்டிச்சி’ என்ற பெயரில் ஒரு நாவலை எழுதியிருக்கிறார். இதன் வெளியீட்டுவிழா, அண்மையில் திருவனந்தபுரம் பிர கிளப்பில் நடந்தது.
கேரள கல்வி அமைச்சர் இரவீந்திர நாத் நூலை வெளியிட, முதல்படியை சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நீலபத்பநாபன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரையாற்றினார்.
கவிஞர் அறிவுமதி, நூலை அறிமுகம் செய்து வைத்துப்பேசினார்.
மலையாளப் பெண் எழுத்தாளர் அல்லி பாத்திமாவின் இந்த பாண்டிச்சி நாவல்,பரவலான பாராட்டைப் பரபரப்பாகப் பெற்றுவருகிறது.