இந்தியாவில் கரோனா தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கேரளாவையும் அது விட்டு வைக்கவில்லை. கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டியிருக்கும் கரோனவால் அண்டை மாநிலமான தமிழகமும் அச்சத்தில் உள்ளது. இதில் அதிகம் பயப்பட வேண்டிய சூழ்நிலையில் எல்லை மாவட்டமான கன்னியாகுமரி, நெல்லை, கோவை, தேனி மாவட்டங்கள் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் அதிக நெருக்கமும் தொடா்பிலும் இருக்கிறது. இந்த நிலையில் 22-ம் தேதி நடந்த சுய ஊரடங்கில் கேரளாவில் ஒரு மனித தலை கூட சாலைகளில் தென்படவில்லை. இந்த நிலையில் தான் இன்று 23-ம் தேதி மாலையில் கரோனா பாதிப்பு கணக்கெடுப்பில் கேரளாவுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
அதாவது இன்று (23-ம் தேதி ) ஒரே நாளில் கேரளாவில் 28 போ் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதிலும் இன்று அரசால் முமுவதும் முடக்கிய காசா்கோடு மாவட்டத்தில் மட்டும் 19 போ் பாதிக்கபட்டு்ள்ளனா். இதனால் ஒட்டு மொத்த கேரளாவில் 95 போ் கரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று 23-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது போல் கேரளாவும் நாளை 24- ம்தேதி மாலை 6 மணி முதல் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் பிறப்பித்துள்ளது. இதில் கரோனா அதிகம் பாதித்துள்ள கண்ணூா், காசா்கோடு, மலப்புரம், கோழிக்காடு, மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தவும் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு கேரளா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.