Published on 20/07/2020 | Edited on 20/07/2020
கீழடியில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
காணொளி காட்சி வாயிலாக அருங்காட்சியம் கட்டும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார். கீழடி அகழ்வாராய்ச்சி என்பது தொடர்ந்து 6ஆவது கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை பல்வேறு பழங்காலப் பொருட்கள், மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்த பிறகுதான் அது எந்த வருடத்தில் சேர்ந்தது என்று தெரியவரும். தொழில் துறையைச் சார்ந்த பல்வேறு கட்டட அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு இந்த அருங்காட்சியத்தில் பார்வைக்காக வைக்கப்படும். இது தமிழகத்திலேயே மிகப் பெரிய முக்கிய அருங்காட்சியமாக இருக்கும் என்பது நிச்சயம்.