Skip to main content

‘வெயிலாவது மழையாவது...’; கரூரை கலக்கும் குருக்கள்!

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Karur two wheeler shade umbrella issue news

 

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் வாகனத்தில் செல்லும்போது வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள நிழல் குடை உடன் குருக்கள் ஒருவர் சுற்றி வருவது பொது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

பொதுவாக ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடைக்காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதமே கோடை வெயில் கடுமையாக இருந்தது. கோடை வெயிலின் உச்சம் கடந்த நான்காம் தேதி துவங்கி 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலேயே அதிகபட்சமாக 100 டிகிரி முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் கோடை மற்றும் அக்கினி வெயில் கொடுமை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மதிய வேளைகளில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. 

 

இதனால் பேருந்து மற்றும் வாகனங்களில் செல்லும்போது அனல் காற்று போல் அடித்தது. அந்த வகையில் அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதிய வேளைகளில் ரோட்டில் ஆள் நடமாட்டம் சற்று குறைந்தே காணப்பட்டு வந்த நிலையில் சின்னதாராபுரம் பகுதியில் விநாயகர் கோவில் அர்ச்சகராக உள்ள பாபு குருக்கள் புதுமையான வழியில் தனது இரு சக்கர வாகனத்தில் நிழலுக்கு குடை அமைத்து, செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று திரும்புவது அப்பகுதி வழியாக வலம் வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Demonstration demanding the passing of the Lawyer Protection Act

கரூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும், இந்தி திணிப்பை தடுக்க வேண்டும், குற்றவியல் சட்ட மாற்றங்களைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story

மூட்டை மூட்டையாக வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்;  தனியார் மருத்துவமனை நிர்வாகம் அடாவடி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
private hospital dumping medical waste near a government school in Karur

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்குச் செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளது. மேலும், ஒரு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கும் நிகழ்வும் ஏற்படுகிறது. 

இந்த நிலையில் கரூர் மாநகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் நூற்றுக்கணக்கான கண்ணாடி பாட்டில்கள் சாக்கு மூட்டையில் நிரப்பி அந்தக் குப்பை மேட்டில் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், அந்தத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் அடங்கிய ஸ்கேன் சென்டர் சீட்டுகளும் சிதறிக் கிடந்தன.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த போது, மருத்துவமனை நிர்வாகம் நேரில் வந்து பேசுங்கள் என்று அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் குற்றம் சாட்டினர். மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், அதை மதிக்காமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை கழிவுகளை வீசி சென்றதால், அவ்வழியாக செல்லக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், குடியிருப்பு பகுதி பொது மக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.