
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டு கூட்டை தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் விஷ வண்டு கூடு கட்டி இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் விஷ வண்டு கூட்டை அழிக்க முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு இன்று வந்த முசிறி தீயணைப்புத் துறையினர் விஷ வண்டு கூட்டைத் தீயிட்டு அழித்தனர்.