Skip to main content

குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; நீதிமன்றம் அதிரடி

 

karur manmangalam girl children incident action taken by court

 

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூர் விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலை செய்துவரும் பெண் ஒருவருக்கு 6 மற்றும் 4 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கூலி வேலைக்கு செல்லும் தாய் தனது குழந்தைகளை பாட்டியிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 14-09-2020 குழந்தையின் பாட்டி வீட்டில் இல்லாத போது அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அத்துமீறி குழந்தைகள் இருக்கும் வீட்டில் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இதனால் கதறி அழுந்த குழந்தைகள் இதுகுறித்து தனது தாயிடம்  கூறியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

புகாரின்படி சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்து, வழக்கானது தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. விசாரணையைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்த சீனிவாசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கவும் கரூர் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !