Skip to main content

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

karur court judgement 20 year jail pocso act case

 

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய சரகத்தில் உள்ள முதலியார் தெருவில் கடந்த 07.09.2021 ஆம் தேதி 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உமர் முக்தர் (47)  என்பவர் மீது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமர் முக்தரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தொடர் விசாரணையில் இருந்து வந்தது. 

 

இந்நிலையில் இவ்வழக்கில் உமர் முக்தர் குற்றவாளி என முடிவு செய்து அவருக்கு  20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2,000/- அபராதமும் விதித்தும் மகிளா நீதிமன்றம்  உத்தரவிட்டது. அத்துடன் அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 வருடம் மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Demonstration demanding the passing of the Lawyer Protection Act

கரூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும், இந்தி திணிப்பை தடுக்க வேண்டும், குற்றவியல் சட்ட மாற்றங்களைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story

மூட்டை மூட்டையாக வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்;  தனியார் மருத்துவமனை நிர்வாகம் அடாவடி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
private hospital dumping medical waste near a government school in Karur

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்குச் செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளது. மேலும், ஒரு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கும் நிகழ்வும் ஏற்படுகிறது. 

இந்த நிலையில் கரூர் மாநகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் நூற்றுக்கணக்கான கண்ணாடி பாட்டில்கள் சாக்கு மூட்டையில் நிரப்பி அந்தக் குப்பை மேட்டில் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், அந்தத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் அடங்கிய ஸ்கேன் சென்டர் சீட்டுகளும் சிதறிக் கிடந்தன.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த போது, மருத்துவமனை நிர்வாகம் நேரில் வந்து பேசுங்கள் என்று அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் குற்றம் சாட்டினர். மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், அதை மதிக்காமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை கழிவுகளை வீசி சென்றதால், அவ்வழியாக செல்லக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், குடியிருப்பு பகுதி பொது மக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.