Skip to main content

வியாபாரிகளின் தந்திரத்தால் சாலையெங்கும் தீபம்

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

 

ann


திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று மட்டும் 15 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது குறைவு என்றாலும், மழைக்காலத்திலும் இவ்வளவு பக்தர்கள் வந்தது வியாபாரிகளை மகிழ்ச்சிக்கொள்ள வைத்தது.


சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டதும் அதுவரை மகாதீபம் காண காத்திருந்த மக்கள் கிரிவலம் வரத்துவங்கினர்.  கிரிவலம் வந்த பக்தர்கள் தீபத்தை கண்டு வணங்கிவிட்டு தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.


அதேநேரத்தில் தீபம் ஏற்றியபோது நெய் தீபம் விற்பனையாளர்கள், அகல் விற்பனையாளர்கள் நீங்களும் இப்போ தீபம் ஏற்றினால் நல்லது என தங்களது வியாபார தந்திரத்துக்காக கூற, அதன்படி சில பக்தர்கள் அகல் விளக்கு வாங்கி பொதுமக்கள் நடக்கும் பாதையென்பதை மறந்து பக்தி மயக்கத்தில் தீபம் ஏற்றினர். சில இடங்களில் அகல் விளக்கு வியாபாரம் செய்பவர்களே அந்த சாலையில் தீபம் ஏற்றி வைத்தனர் தந்திரமாக.


இதைப்பார்த்துவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள் அங்கங்கு தீபம் ஏற்றிவைத்தனர். இதனால் நகரின் பல சாலைகளிலும், கிரிவலப்பாதையிலும் பலயிடங்களில் அகல் விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. இதனால் நடந்து செல்பவர்கள் தான் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்