
ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை சென்னை காசி தியேட்டரில் பார்த்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பேட்ட படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு வருகிறோம். சென்னை காசி தியேட்டத்தில் படம் பார்த்தேன். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்தனர். ஒரு டீமாக இந்த படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது. ஒரு வருடமாக எதிர்பார்த்து எடுத்தோம். அதன்படி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. இவ்வாறு கூறியுள்ளார்.