பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத பாகுபாட்டல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் '#IndiansAgainstCAB' என்ற ஹேஸ்டெக் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில், "இந்தியாவை மதச்சார்பற்றதாக வைத்திருப்போம், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மறுப்பு தெரிவிப்போம், அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம், இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது" என பதிவிட்டுள்ளார்.