Skip to main content

மேகதாது விவகாரம் - கர்நாடக முதல்வரின் கொடும்பாவி எரிப்பு!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
h

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. 

 

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன்  தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது,  தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், கர்நாடக அரசின் அராஜக போக்கை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் எனவும்  முக்கிய வீதிகள் வழியாக முழக்கங்கள் எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றவர்கள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணாடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடுக"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 04/07/2021 | Edited on 04/07/2021

 

tamilnadu chief minister wrote a letter for karnataka chief minister

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இன்று (04/07/2021) கடிதம் எழுதியுள்ளார்.  

 

அந்த கடிதத்தில், "மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாகக் கூறும் கருத்தை ஏற்க முடியாது. பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. மேகதாது திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு அங்கீகரித்த நதிநீர் பங்கீட்டு அளவை குறைத்துவிடும். தமிழகம்- கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேகதாது திட்டத்திற்கு ஒத்துழைப்பு கேட்டு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, நேற்று (03/07/2021) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம்!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

karnataka chief minister wrote a letter for tamilnadu chief minister for today

மேகதாது அணை தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று (03/07/2021) கடிதம் எழுதியுள்ளார். 

 

அந்த கடிதத்தில், "மேகதாது அணை கட்டுவது தமிழகத்தைப் பாதிக்காது. மேகதாது திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதன் மூலம் தமிழகம், கர்நாடகா என இரு மாநிலமும் பயன்பெறும். மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகளும் தொடர்புடைய அதிகாரிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.