Skip to main content

இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்

 

kanchipuram pavapetta husband and wife incident 

 

கணவர் இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் பாவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 77). இவருக்கு மல்லிகா (வயது 68) என்ற மனைவியும் இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் வழக்கம்போல் இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மல்லிகா தனது கணவர் துரைசாமியை எழுப்பி உள்ளார். அப்போது அவர் எவ்வித அசைவும் இன்றி படுக்கையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் துரைசாமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது துரைசாமி ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கணவர் இறந்த செய்தியை வீட்டில் இருக்கும் மல்லிகாவுக்கு தொலைபேசி மூலம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கணவர் இறந்த அதிர்ச்சி தகவலை கேட்ட மல்லிகாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மல்லிகாவும் உயிரிழந்தார். கணவன் மற்றும் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பாவாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !