Skip to main content

கனகா பாலனின் கவிதை நூல்கள் வெளியீடு!

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

கவிஞர் கனகாபாலனின் ’அக யாழின் குரல்’ ,’என் கனா யாழ் நீ ’ ஆகிய  கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா  மாதவரம் விஜய் பார்க் ஓட்டலில் சிறப்புற நடந்தது. கவிஞர் முத்துவிஜயன் கலகலப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க... விழா தொடங்கியது. கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமை ஏற்க,  கவிஞர்கள் மரியதெரசா, நிமோஷினி ஆகியோர்  நூல்களை வெளியிட்டனர். 

 

poetry

 

இதை  ஆனந்தராஜ், ஜெயலட்சுமி, சுந்தரமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  கவிக்கோ துரைவசந்தராசன்  நூலாசிரியர் குறித்து கவித்துவ மின்னல் தெறிக்க அழகான அறிமுகவுரையை வழங்கினார். 

 

வாழ்த்துரை வழங்கிய வானரசன்  உரையில் நகைச்சுவை மிளிர்ந்தது. ’பாவையர் மலர்’ ஆசிரியர் வான்மதி, தன் வசியப் பேச்சால் ஈர்த்து அவையைக் கலகலப்பாக்கினார்., கவிஞர் துருவன், சுவையான கவிதைகளை எடுத்துக் காட்டி உரைநிகழ்த்தினார்.  கவிஞர் நர்மதா, சுவையான தன் பேச்சில் பெண்ணியம் குறித்தும் குரல் கொடுத்தார். சிந்தைவாசன் ,நேரம் கருதி நூல்களின் ஆய்வுரையை சுருக்கமாகவும் சுவைபடவும் வழங்கினார். மேடை ஏற இயலாத சுந்தரமூர்த்தியும் தன் அன்பான உரை மூலம் நூலாசிரியரை வாழ்த்தினார். 

 

poetry

 

 

poetry

 

நூலைவெளியிட்ட மரியதெரசா, படபடவென வாழ்த்துமழை பொழிய, நிமோஷினி விஜயகுமார் அருவியாய் ஆர்பரித்து அவையோரை ஈர்த்தார்.   பேசத்தெரியாது என்றபடி மேடையேறிய ரவி தங்கராஜும் சுவையாகவே பேசினார். தலைமையேற்ற தமிழ்நாடன், கவிதைகள், மொழியின் வேர்கள். எனவே இதற்குக் காரணமான கவிஞர்கள் கொண்டாடப்படவேண்டும். கவிஞர்களைக் கொண்டாடாத  நாடு ஆரோக்கியமான நாடாக இருக்காது என்றார்.  அரங்கு முழுக்கக் கவிஞர்களாகக் காட்சியளித்தது, இவ்விழாவின் சிறப்பாகும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொங்கல் மகிழ்வாய் பொங்கட்டும்... புன்னகை என்றும் தங்கட்டும்” - கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Poet Mamani Aroor Tamil Nadan Expressed his congratulations for pongal

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இனிய உதயம் பத்திரிகை ஆசிரியரும், கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள கவிதையில்.,

பொங்கல் மகிழ்வாய் பொங்கட்டும்!
புன்னகை என்றும் தங்கட்டும்!
எங்கள் தமிழர் வாழ்கவென
இதயம் உரக்கச் சொல்லட்டும்!

கரும்பாய் நெஞ்சம் இனிக்கட்டும்!
கனவுகள் கண்முன் மலரட்டும்
அரும்பாய் இன்றி பேரன்பும்
அழகாய் பெரிதாய் மலரட்டும்!

மஞ்சள் இஞ்சி மணக்கட்டும்!
மகிழ்வே எங்கும் பெருகட்டும்!
வஞ்சம் சேரா வாழ்வினிலே
வளங்கள் எல்லாம் சேரட்டும்!

கழனிகள் எல்லாம் செழிக்கட்டும்!
கண்ணீர் நதிகள் மறையட்டும்!
உழவைச் சுமந்த முதுகெல்லாம்
உடனாய் மகிழ்வைச் சுமக்கட்டும்!

உள்ளம் என்னும் திடலினிலே
உணர்வுப் புழுதியும் பறக்கட்டும்!
ஜல்லிக் கட்டுக் கண்களிடம்
தக்கவர் எல்லாம் வீழட்டும்!

காற்றும் கவிதை பேசட்டும்!
காதலின் ஆழம் கூடட்டும்!
ஊற்றாய் பொங்கும் பேரன்பில்
உயிர்கள் சுகமாய் நனையட்டும்!  

மனிதம் ஒன்றே நம்கொள்கை!
மகிழ்ச்சி ஒன்றே நம்பாதை!
புனிதம் என்றால் ஈகைதான்!
புன்னகை வீதியில் நம் பயணம்!

சங்கம் கண்ட தமிழன்னை
சரிதம் தொடர்ந்து எழுதட்டும்!
பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலிது
பூவாய் வாழ்த்தை இறைக்கின்றேன்.!

Next Story

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைப் பேசும் நூல்; புத்தகத்தை வெளியிட்ட இயக்குநர் 

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

 A book of poetry on the lives of marginalized people; the director who published the book

 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ‘கூகை’ நூலகத்தில்,  மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகிழ் அறிவின் ‘நீலவானில் மிதக்கும் நட்சத்திரக் கடிதம்’ எனும் முதல் கவிதை நூல் 04-03-2023 அன்று வெளியானது. 

 

திரைப்பட இயக்குநர் வ.கீரா அவர்கள் நூலை வெளியிட சமூக ஆர்வலர் ஜலீல் நூலை பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் கரன் கார்க்கி, இயக்குநர் வடலூர் ஆதிரை, எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், எழுத்தாளர் பிறைமதி குப்புசாமி, தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, வழக்கறிஞர் பூபாலன், கவிஞர் வீரா உள்ளிட்ட திரைப்பட உதவி இயக்குநர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நூலை வெளியிட்டு பேசியவர்கள்,  “ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பற்றி தனது நூலில் அற்புதமாக எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டனர்.