Skip to main content

கமல் பிறந்த நாள் கொண்டாட்டம்...

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

Kamal's birthday celebration ...

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 66 -ஆவது பிறந்த நாள், இன்று அக்கட்சியினரால் தமிழகம் முழுக்கக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது கட்சியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கியுள்ளார்கள்.

ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர்  துரைசேவகன் கூறும் போது,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி ஈரோடு மேற்கு மாவட்டத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் தொடர்ந்து 6 நாட்களுக்குத் துப்புரவுத் தொழிலாளர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என 666 பேருக்கு, பட்டாசு, இனிப்பு, வேட்டி -சேலை வழங்கி கொண்டாடப்படவுள்ளது. சூரம்பட்டி பகுதி பெரியசேமூர் நகரம், காசிபாளையம் பகுதி, சூரியம்பாளையம் பகுதி என எல்லா இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணா பிறந்தநாளையொட்டி 12 சிறைவாசிகள் விடுதலை

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
12 prisoners released on Anna's birthday

அண்ணா பிறந்த நாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக சிறையில் உள்ள 12  சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 12 சிறைவாசிகளையும் விடுவிக்கத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கடலூர், கோவை, வேலூர், புழல் ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 12 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் சிறையில் நீண்ட காலமாக உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கோவையிலிருந்து ஆறு சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பூரி கமல், விஜயன், அபுதாஹிர், ஹாரூன் பாட்ஷா, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கோவை சிறைத்துறை எஸ்.பி தகவல் வெளியிட்டுள்ளார். வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீனிவாசன் என்பவரும், புழல் சிறையில் இருந்து ஜாகீர் என மொத்தம் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

நிவாரணப் பணிகள்; திமுகவினருக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள்!

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Relief works Kanimozhi MP for DMK Request

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாளை (ஜனவரி 5 ஆம் தேதி) முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். இதனால் அவரை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வருகை தருவார்கள். மேலும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவரது பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் எனது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்திக்க வருவதையும், வாழ்த்து பொருட்கள் அனுப்புவதையும் தவிர்க்க வேண்டுமாறு கனிமொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்ற மாதம் தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னையில் வெள்ளம் வடிவதற்குள் மற்றுமொரு பேரிடராக, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி அதிக பாதிப்புக்குள்ளானது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இச்சூழலில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் திமுகவினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.