kamalhasan twit

Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தொடர்ந்துதேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு பல மாவட்டங்களுக்குச் சென்று மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். இருப்பினும் இடையிடையே ட்வீட் மூலமும் தனது கருத்தைத்தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமெனத் துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள். முன்னது வெறி. பின்னது வீரம். நீங்கள் யார் பக்கம்?' எனத் தெரிவித்துள்ளார்.