Skip to main content

கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்த காவல்துறை

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

kallakurichi district two persons police investigation

 

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று மாணவி உயிரிழந்தது தொடர்பாக, நடந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வரும் நிலையில், மேலும் இரண்டு பேரை கைது செய்தனர். 

 

இதன்மூலம், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Education of poor students questioned!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் ரைஸ் எம்எம்எஸ் (Rural Institute of Community Education - Mathakondapalli Model School) பள்ளியானது 1999-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற தன்னார்வல நிறுவனமான தெரஸ் டெஸ் ஹோம்ஸ் (TDH - NL) அளித்த 90 கோடி நிதியின் மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளித்து வந்திருக்கின்றது. 

ஆனால், 2014-ஆம் ஆண்டில் பள்ளியின் குழு செயலராக இணைந்த மேரு மில்லர் என்பவரால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் அப்பள்ளியில் ஏற்பட்டிருக்கின்றது. அங்கு இலவச கல்வி பயின்று வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வெளியேற்றி இருக்கின்றது. மேலும், பதினாறு கோடி மதிப்பிலான பள்ளியின் சொத்தை ஆலிவர் சாலமன் என்பவருடன் இணைந்து மேரு மில்லர் சட்ட விரோதமாக விற்று ஊழல் செய்துள்ளார். 

இதனை வன்மையாக கண்டித்து பத்திரிக்கையாளர் சிவராமன், மேரு மில்லரை பணி நீக்கம் செய்ய வேண்டி ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், புதிய செயலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், கேள்விக்குறியாக்கப்பட்ட பல ஏழை மாணவர்களின் கல்விநலன் காக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இவரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.