
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியதையடுத்து, தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துத்தெரிவித்துள்ளார். ''கலைஞர் திருமகனே... கண்ணனுக்கு இனியவனே.. நிலம் போல் பொறுமை கண்டாய்... நீர் போல் எளிமை கொண்டாய்... தீயாய் எழுந்து நின்றாய்... காற்றாய்பயணமுற்றாய்... அதனால்தான்வான்போல் வளர்ந்து நிற்கிறாய்... உன் வெற்றி புறவழிப்பட்டதல்ல... அறவழிப்பட்டது... அதனால்தான் நினைவிடத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணாடி கழற்றி கண் துடைக்கிறார் கலைஞர்... இனி இனமொழியைமீட்டெடுக்கும் உனதுகரம்... எழுதுகோலில்பட்டெடுக்கும் எனது குலம்'' எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)