Skip to main content

கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Kachchathivu festival starts with flag hoisting

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தியா - இலங்கை உறவை மேம்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவில் தமிழக மீனவர்களும் அனுமதிக்கப்படுவர். மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க விழா இன்று (23.02.2024) மாலை அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த கொடியை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஏற்றி வைத்தார்.

அதே சமயம் ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததை ரத்து செய்து மீனவர்கள் 3 பேரையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாகவும் மீனவர்கள் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக கச்சத்தீவுக்கு செல்லும் பயணத் திட்டத்தை ரத்து செய்வதாக வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இரவு 7 மணியளவில் சிலுவைப் பாதையும், தேர் பவனியும் நடைபெற உள்ளது. திருவிழாவின் இரண்டாம் நாளான நாளை (24.02.2024) காலை கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கொடி இறக்கத்துடன் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா முடிவடைகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மீனாட்சி - சுந்தரேசுவரர்  திருக்கல்யாணம்; மதுரையில் கோலாகலம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Meenakshi Sundareswarar Thirukalyanam; Kolakalam in Madurai

உலக பிரசித்தி பெற்ற மதுரை  சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண இன்று (21.04.2024) அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.  இந்த திருக்கல்யாணத்தை எளிதாக காண பக்தர்களுக்காக மாட வீதிகளில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் தங்களது புது தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கேசரி, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வெஜ் பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவை கொண்ட அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் டிஜிட்டல் முறையில் மீனாட்சிக்கு மொய் காணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.