/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks33322211.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (21/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு இந்து, சமய அறநிலையத்துறையின் சார்பில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒன்பது நபர்களுக்கும், ஒரு நூலகர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு இந்து, சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)