Skip to main content

அமைச்சர் பிறந்தநாள் கபடி போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினர்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

kabaddi match conducted for udhayanidhi stalin birthday in cuddalore 

 

திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி நெய்வேலியில் உள்ள கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்றது. கபடி போட்டியை கடந்த 19 ஆம் தேதி நெய்வேலி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

 

லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலிஸ், தமிழக வனத்துறை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கபடி வீரர்கள் பங்கேற்றனர்.

 

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் டெல்டா ஸ்டோர்ஸ் வடுவூர் அணிகள் மோதிய நிலையில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணியும் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணியும் மோதிய நிலையில் சென்னை சிட்டி போலீஸ் அணி வெற்றி பெற்றது.

 

போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளையும் வெற்றிக் கோப்பைகளையும் வழங்கினர்.

 

kabaddi match conducted for udhayanidhi stalin birthday in cuddalore 

 

இந்நிகழ்ச்சியில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தி.மு.க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி; கபடியில் ஹரியானா அணி வெற்றி

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
khelo India Games; Haryana team wins in Kabaddi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நாளை (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

அதே சமயம் சென்னையில் உள்ள நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக நாளை (19.01.2024) தனி விமானம் மூலம் சென்னை வரவுள்ளார். மேலும் 5:45 மணி அளவில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக இன்று (18.01.2024) கேலோ இந்தியா விளையாட்டின் ஒரு பகுதியாக கபடி போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இரு பிரிவுகளில் நடைபெற்ற மகளிர் பிரிவு கபடி போட்டியில் 41-20 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணியை ஹரியானா அணி வீழ்த்தியது.