Skip to main content

“திருமாவளவன் சரியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்..” - கி.வீரமணி 

 

K Veeramani speech thirumavalavan function

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “எங்கள் அணி பிணியை போக்கும் அணி. இன்று தமிழகத்தில் சாதி வெறி ஆட்டம் கிடையாது. எங்களது கூட்டணி பதவி கூட்டணி அல்ல. கொள்ளை கூட்டணி என கேரளாவில் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். வடமாநிலத்தில் கூட்டணி என்பது அரசியல் கூட்டணி, நமது கூட்டணி கொள்கை கூட்டணிக்கு பின்னடைவு வந்தே கிடையாது. 

 

நண்பன் யார், எதிரி யார் என்பதை நாம் மட்டும் தெரிந்து கொள்ளாமல் பொது மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். திருமாவளவன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தி சரியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது” என கி.வீரமணி கூறினார்.

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !