Skip to main content

“நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி வலியுறுத்தும்” - ஜோதிமணி எம்.பி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Jyothimani says We will strongly a series of meetings to cancel the NEET exam

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஜோதிமணி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய ஜோதிமணி, “கடந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பாக களப்பணியாற்றி நமக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்தத் தேர்தலில் அவர் பங்கேற்க முடியவில்லை என்றாலும், கரூர் திமுகவை சிறப்பாக கட்டமைத்து, அவர் ஏற்படுத்திய படை என்று சொல்லும் அளவிற்கு கரூர் திமுகவினர் முன்னின்று சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது முறையாக நமக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளனர். அதற்காக செந்தில் பாலாஜிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல முடியாத சூழல் இருந்தாலும், அவருக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, “நீட் தேர்வு விவகாரம் தற்போது அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் தற்போது எதிர்க்க துவங்கியுள்ளனர். தமிழக முதல்வர் நீட் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். அது தொடர்பான தகவல்களைப் பல்வேறு மொழிகளில் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார். நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வலிமையாக இந்தியா கூட்டணி வலியுறுத்தும்.

மத்திய மோடி ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது, அதில் குறிப்பாக கரூர் நாடாளுமன்றத் தொகுதியும் புறக்கணிக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரூரை சேர்க்காமல் புறக்கணித்துள்ளனர், இதே போன்று மதுரையிலிருந்து பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலையும் கரூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுவேன். ஆளும் கட்சிக்கு இணையாக எதிர்கட்சியிலும் எம்பிகள் இருக்கின்றனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவை எதிரொலிக்கும் என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு விவகாரம்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
NEET Exam Issue; Supreme Court Chief Justice barrage of questions

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுத் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக இடையீட்டு மனுத் தாக்கல் செய்தனர் அதில், “நீட் தேர்வில்  650 முதல் 680 வரை என அதிக மதிப்பெண்கள் எடுத்த சுமார் 3.5 லட்சம் மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (22.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி,  சந்திர சூட் , “தரவுகள் அடிப்படையில் பார்த்தால் பிகார் மாநிலத்தின் பாட்னா உள்ளிட்ட இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவியுள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்; மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
NEET exam malpractice issue; Central minister explanation

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) காலை தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரம், நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்பனை ஆகியவை குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் இன்றைய கேள்வி நேரத்தில் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.

அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,  “கடந்த 7 ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்பட்ட பிறகு 240க்கும் மேற்பட்ட தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன என்பதை முழுப் பொறுப்புடன் என்னால் சொல்ல முடியும். நீட் தேர்வு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றமே இரண்டு முறை தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

NEET exam malpractice issue; Central minister explanation

அதே சமயம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசுகையில், “நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்து முக்கிய தேர்வுகளிலும் மிகக் கடுமையான சிக்கல் உள்ளது என்பது நாடு முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. இந்திய தேர்வு முறை மோசடி ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதில் மிகுந்த அக்கறையுடன் உள்ளனர். நீங்கள் பணக்காரராக இருந்தால், உங்களிடம் பணம் இருந்தால், நீங்கள் இந்தியத் தேர்வு முறையை வாங்கலாம்” எனத் தெரிவித்தார்.