சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரும் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, இன்று நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்து நிலை கொண்ட விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிப்பதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (07.02.2023) சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.