Skip to main content

செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி...

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
malai murasu


 

 

 

நேற்று, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மாலை முரசு தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் ஷாலினி உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் வழங்கினார்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் பத்திரிகையாளர் மீது உபா! காஷ்மீரில் தொடரும் அத்துமீறல்!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

இந்தியாவின் பல பகுதிகளில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காஷ்மீரிலோ பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது கொடிய உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கத் துடிக்கிறது காவல்துறை.

 

 female journalist arrest in kashmir


மஸ்ரத் ஜேரா என்ற பெண் பத்திரிகையாளர், இந்தியா மட்டுமின்றி, உலகின் புகழ்பெற்ற பல்வேறு பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர். இவர்மீதுதான் உபா சட்டத்தின் 13வது பிரிவு மற்றும் 505-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேசவிரோத கருத்துகளை பதிவு செய்தார். இளைஞர்களை தெருவில் வந்து போராடுவதற்குத் தூண்டும் விதமாகப் பதிவிட்டார். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரது பதிவுகள் இருக்கின்றன” என்று மஸ்ரத் ஜேரா மீது புகார்களை அடுக்குகிறது ஸ்ரீநகர் காவல்துறை. ஆனால் குறிப்பிட்டு, இந்த பதிவுதான் இவ்வளவு கொடுமையான ஒரு சட்டத்தைப் பதிவு செய்ததற்கான காரணம் என்று காவல்துறை தற்போது வரை தெளிவுப்படுத்தவில்லை.
 

nakkheeran app



சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான, உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தால், ஒருவரை எடுத்த மாத்திரத்தில் தீவிரவாதி என்று முத்திரை குத்தமுடியும். ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைத்து வைக்கமுடியும். தண்டனைக் காலமும் குறிப்பிட்ட வரம்புக்குள் வராது. இப்படியொரு கொடிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மஸ்ரத், “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் நண்பர்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் மூலமாக மட்டுமே இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறிந்துகொண்டேன்.

 

 female journalist arrest in kashmir

 

ஜம்மு காஷ்மீரில் நடப்பவற்றை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் குரலை ஒடுக்கப் பார்க்கிறது அரசு. என்மீதான வழக்கில் ஒரு இடத்தில்கூட என்னைப் பத்திரிகையாளர் என்று குறிப்பிடவில்லை. வெறும் முகநூல் பயன்பாட்டாளர் என்றே காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மிக முக்கியமாக, நான் சமூக வலைதளங்களில் பதிவிட்ட அனைத்துமே இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் பதிவான செய்திகள் மட்டுமே. இதற்காக என்னைக் கைதுசெய்வது எந்தவிதத்தில் நியாயம்” என்று ஆவேசமாகக் கேள்வியெழுப்பி இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்புதான் புகழ்பெற்ற அறிஞர் ஆனந்த் தெல்டும்ப்டே மற்றும் பத்திரிகையாளர் கவுதம் நவலகா ஆகியோர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது, காஷ்மீரில் ஒரு பெண் பத்திரிகையாளரும் இதே கொடூர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

போய் வா ஷாலினி, புதிய பிறவியில் இன்னும் பொலிவுடன் வா... -அமைச்சர் ஜெயக்குமார்

Published on 16/07/2018 | Edited on 16/07/2018

நேற்று, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மாலை முரசு தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் ஷாலினி உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்த அமைச்சர் ஜெயக்குமாரின் இரங்கல் செய்தி...

 

 

 

malai murasu


 

 

 

“மாலைமுரசு தொலைக்காட்சியின் நிருபர் ஷாலினி விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஒருகணம் நிலைகுலைந்து போனேன். தினமும் காலைநேரத்தில் நான் அலுவலகம் கிளம்பும்முன் எனது வீட்டருகே செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அப்படியான சந்திப்புகளின்போது, துடிப்புடனும், பொறுப்புடனும் கேள்விகளை ஏந்தி வரும் அந்த சின்னஞ்சிறு பெண் நிருபர் ஷாலினி என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பார். பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து, செய்தித்துறையில் சாதித்திட பல கனவுகளை கண்டிருந்த அந்த இளம் செய்தியாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார், அதுவும் பிறந்தநாளில் உயிரிழந்தார் என்ற செய்தி என்னை உலுக்கி விட்டது. ஷாலினியின் உருவம் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம். நாளை செய்தியாளர் சந்திப்பின்போது ஒளிரும் கண்களுடனும், சிரித்த முகத்துடன், வலுவான கேள்விகளை ஏந்திவரும் ஷாலினியை எங்கே என்று தேடுவேன். செய்தியாளர்களே, நண்பர்களே அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், உங்கள் உயிர் விலைமதிப்பில்லாதது, சமூகத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் பெரிய சொத்து. பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ளுங்கள். விபத்தில்லா நெடுவாழ்வு வாழுங்கள். உயிரிழந்த ஷாலினியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள். 

 

போய் வா ஷாலினி, புதிய பிறவியில் இன்னும் பொலிவுடன் வா...”